×

விருது வழங்குவதில் முறைகேடா..?

ராமநாதபுரம், ஜூன் 19:ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு முகம்மது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லுாரியை சேர்ந்த 6 மாணவிகள் தாங்கள் வீல்மெடல் வேர்ல்டு ரிக்காட் நிறுவனத்தின் சாதனை புரிந்துள்ளதாக பதக்கங்கள், அவார்டுடன் வந்திருந்தனர். மாணவிகள் சோனியா, பிரேமலதா, அபர்ணா மூவரும் மூன்றரை மணி நேரத்தில் 450 தமிழ் பழமொழிகளை வேகமாக பயிற்றுவித்ததாகவும், மோனிஷா, ரம்திகா இருவரும் 3 ஆயிரம் வித்தியாசமான பேப்பர் ஆர்ட் செய்ததாகவும், அபிநயா இந்திய தலைவர்கள் 548 பேர் முகங்களை வரைந்ததாகவும் இது உலக சாதனை என கூறி அவார்டு மற்றும் பதகங்களை வீல்மெடல் ஆப் வேல்ர்ட் ரெக்கார்டு வழங்கியுள்ளதாக தெரிவித்தனர்.  மேலும் பதக்கங்கள் பெறுவதற்காக 5 பேர் ரூ.8 ஆயிரமும், ஒருவர் 18 ஆயிரமும் கொடுத்துள்ளதாக தெரிவித்தனர். இந்த நிறுவனம் சார்பில் இதுவரை பலருக்கு வீல் மெடல் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு, முகவை ரெக்கார்டு என வழங்கியுள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும் குறிப்பிட்ட தனியார் கல்லுாரியில் மட்டும் உலக சாதனை நிகழ்த்தியுள்ளதாக அதிகமான அவார்டுகளை இந்த நிறுவனம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனம் வழங்கும் ரெக்கார்டுகள் உண்மையானதாக முறையான அனுமதி பெற்று நிறுவனம் செயல்படுகிறதா, சாதனையாளர்கள் என்பதை யார் முடிவு செய்கிறார்கள்,   என்பதை மாவட்ட நிர்வாகம் முறையாக நேரடி ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து வீல் மெடல் ஆப் வேர்ல்ட் ரெக்கார்டு நிறுவனர் கலைவாணியிடம் கேட்டபோது, நான் ரொம்ப பிஸி, அனைத்து கேள்விகளையும் மெயிலில் அனுப்புங்கள் எங்கள் டீம் பதிலளிப்பார்கள் என போனை துண்டித்தார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை