×

அச்சுந்தன்வயல் முதல் பட்டிணம்காத்தான் வரை சாலை விரிவாக்க பணிகள் தரமாக உள்ளதா..?

ராமநாதபுரம், ஜூன் 19: ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல் முதல் பட்டணம்காத்தான் வரை சுமார் ரூ.34 கோடி மதிப்பில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுகிறது. சாலையின் நடுவே தடுப்புகளும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் கால்வாய்களும் கட்டப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் வனத்துைற அலுவலகம் அருகே நடைபெற்று வரும் சாலையின் தரத்தை நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள் குழுவினர் புதிதாக போடப்பட்டுள்ள சாலையில் 2 அடி குழி தொண்டி மண், கருங்கல், ஜல்லி, கலவை போன்றவைகளை தரம்பிரித்து ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 8 கி.மீ., நான்கு வழி சாலை என அறிவிக்கப்பட்ட நிலையில் சில இடங்களில் குறுகிய அளவில் சாலை நடப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் சாலை பணிகள் நடைபெறும் அரசு மருத்துவமனை ரோட்டில் கால்வாய் அமைக்க தோண்டியதால் அருகில் உள்ள மரம் சாய்ந்துவிட்டது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.   

நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் மாரியப்பன் கூறுகையில், பட்டிணம்காத்தான் சுற்றுச் சாலையிலிருந்து 4 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. தடுப்புச் சுவருக்கு இருபக்கமும் 7 அரை மீட்டர் அகலத்தில் 15மீ., அளவில் சாலை அமைகிறது. பணிகள் முடிந்த இடங்களில் கலவைகள் எடுத்து சரியான ஈரபதத்தில் இருக்கிறதா என ஆய்வு செய்கிறோம். சரியான பதத்தில் கலவைகள் இருந்தால் ரோடு தரமானதாக இருக்கும் என்றார்.

Tags : road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...