×

அதிகாரிகள் கண்டுகொள்வார்களா? விவசாய உற்பத்தியாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

தொண்டி, ஜூன் 18: கிராமப்புற பெண்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் தொண்டியில் நபார்டு வங்கியின் சார்பில் விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவன கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.  கிராமப்புற பெண்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் நபார்டு வங்கி முலம் லோன் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. நேற்று தொண்டியில் வங்கியின் சார்பில் வழங்கப்பட்ட விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் பொருப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வளர்ச்சி மேலாளர் மதியழகன் தலைமை வகித்தார். கிராமப்புற பெண்கள் மேம்பாட்டு நிறுவன இயக்குனர் வெள்ளிமலர் முன்னிலை வகித்தார். மத்திய அரசின் இலக்கான 2022ம் ஆண்டில் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக வேண்டும் என்ற நோக்கத்தை வலியுறுத்தி பேசப்பட்டது. ராமநாதபுரம் போன்ற வறட்சியான பகுதிகளில் குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி அதிக மகசூலை பெறக்கூடிய சிறு தானிய வகைகளை பயிரிடவும், இடைத்தரகர்கள் இன்றி லாபம் ஈட்டவும், குறிப்பாக காய்கனிகள் பயிரிட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்தும் கலந்தாய்வு கூட்டத்தில் விளக்கி கூறப்பட்டது.

Tags : consultation meeting ,manufacturers ,
× RELATED தூத்துக்குடியில் நாளை முதல் அனைத்து...