ஜூன் 21ல் நடக்கிறது ஓய்வூதியர் சங்க பொதுக்குழு கூட்டம்

ராமநாதபுரம், ஜூன் 19: ராமநாதபுரம் மாவட்ட அனைத்து ஓய்வூதியர் மற்றும் மூத்த குடிமக்கள் நல உரிமைச் சங்கத்தின் 26வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் ஜனார்த்தன மாளிகையில் நடந்த கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சங்க மாவட்டப் பொருளாளர் சுவாமிநாதன் ஆண்டறிக்கையை வாசித்தார். இணைச்செயலாளர் பெர்னார்ட் ஆரோக்கியசாமி தீர்மானங்களை வாசித்தார். மாதத்தின் இடையே ஓய்வூதியர் மரணமடையும் நிலையில், அவர்களுக்கான அந்த மாத ஓய்வூதியத்தை வழங்கவும், அடுத்தமாதம் முதலே அவர்களுக்கான குடும்ப ஓய்வூதியத்தை வழங்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், சங்கத்தின் துணைத் தலைவர் பதவி உள்ளிட்டவற்றுக்கான கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட துணை கருவூல அலுவலர் தியாகராஜன், ராமநாதபுரம் மாவட்ட பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் எம்.கே.செந்தில்நாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். துணைத் தலைவர் இ.முத்துகிருஷ்ணன் வரவேற்றார். நிர்வாகி பாலகிருஷ்ணன் நன்றி கூறினார். கீழக்கரை, ஜூன் 19:ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கிழக்கு மாவட்ட பொருளாளர் முகம்மது ரபீக் இல்லத்திருமணம் விழா நடைபெற்றது, இதில் எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முகம்மது முபாரக் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கிழக்கு மாவட்ட பொருளாளர் முகம்மது ரபீக் மகன் முகம்மது நியாஸ்கான் மணமகனுக்கும், பனைக்குளம் தமீம் ராஜா மகள் ஹிதாயத் நூராணியா (ஆலிமா) மணமகளுக்கும் தினைக்குளம் அல் மஸ்ஜிதுன் நூர் ஜூஆ பள்ளி வளாகத்தில் திருமணம் நடைபெற்றது. இதில் மலேசியா டி.எம்.ஒய் குருப் ஆப் கம்பேனியின் நிறுவனர் டத்தோ முகம்மது யூசுப் தலைமை வகித்தார். தினைக்குளம் முஸ்லீம் ஜமாஅத் மற்றும் பனைக்குளம் முஸ்லீம் நிர்வாகசபை ஜமாத்தினர்கள் ஜமாஅத் தலைவர் முகம்மது அலி ஜின்னா முன்னிலையில் திருமணத்தை நடத்தி வைத்தனர். மாவட்ட தலைவர் அப்துல் வஹாப் வரவேற்றார்.இதில் எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் நெல்லை முபாரக், மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது, மாநில செயலாளர் ரெத்தினம் அண்ணாச்சி, துணைத்தலைவர் சோமு, செயலாளர் அஸ்கர்அலி, பைரோஸ்கான் மற்றும் அமமுக மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த், தி.மு.க ஒன்றிய செயலாளர் புல்லாணி, பொருளாளர் பொண்ணுசாமி உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். முன்னாள் எஸ்.டி.பி.ஐ தலைவர் அப்பாஸ் ஆலிம் நன்றி கூறினார்.

Tags : Pensioners' Association General Meeting ,
× RELATED 21-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்