மதுரையில் அடுத்தடுத்து 2 வீடுகளில் புகுந்து 15 பவுன் கொள்ளை

மதுரை, ஜூன் 19:  மதுரையில் அடுத்தடுத்து 2 வீடுகளில் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை நடராஜ் நகர் தாமரை வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(45). இவர் குடும்பத்துடன் கடந்த 14ம் தேதி வெளியூர் சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் வெண்டிலேட்டர் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 15 பவுன் நகை, ரொக்கம் ரூ.15 ஆயிரத்து 500ஐ காணவில்லை. இதுகுறித்து கார்த்திகேயன், கரிமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். மதுரை சொக்கிகுளம் ஜவகர் தெரு அப்பார்ட்மெண்டில் வசித்து வருபவர் சின்னத்துரை (67). கடந்த 15ம் தேதி வெளியூர் சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு ஊர் திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த ரூ.42 ஆயிரத்து 350ஐ காணவில்லை. இதுகுறித்து சின்னத்துரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : houses ,Madurai ,
× RELATED வீடு, கோயில்களில் தீபம்ஏற்றி மக்கள் வழிபாடு