கோயில் இடத்தை அளக்க கோரி மனு

மதுரை, ஜூன் 19: கள்ளிக்குடி தாலுகா கல்லணையை சேர்ந்த மண்டை பழனியாண்டி நேற்று கலெக்டர் சாந்தகுமாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், ஊரில் உள்ள 22 சென்ட் இடத்தில் சமயகருப்பு சாமி கோயில் கட்டி வழிபாடு நடத்தி வருகிறோம். இடம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. அதில் நீதிமன்றம் இடத்தை அளந்து கொடுக்க கோரி உத்தரவிட்டது. இதுதொடர்பாக கடந்த 2017 முதல் இடத்தை அளந்து கொடுக்க கோரி அதிகாரிகளிடம் மனு செய்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. கோயிலுக்கு சொந்தமான இடத்தை அளந்து கொடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக கள்ளிக்குடி தாசில்தார் விசாரிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

Tags :
× RELATED கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல...