×

ராசிபுரம் அருகே சிதிலமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்

ராசிபுரம், ஜூன் 19: ராசிபுரம் அருகே மலையாம்பட்டி ஊராட்சி பகுதியில், சாலை அமைக்கும் பணிக்காக கொட்டபட்ட ஜல்லியால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள்.  ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்டது மலையாம்பட்டி ஊராட்சி. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கிருந்து புதுப்பட்டி பேரூராட்சி பகுதிக்கு செல்லும் சாலை சிதிலமடைந்து காணப்பட்டது. இதை தொடர்ந்து தார்சாலை அமைக்கும் பணி கடந்த ஒரு மாத காலத்திற்கு முன் தொடங்கியது.  இதற்காக சில இடங்களில் மண்ணை நிரவி ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. ஆனால் பணிகள் இது நாள் வரை தொடங்க வில்லை. இதனால் சாலை பழைய படி சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும் கொட்டிய ஜல்லிக்கற்கள் சிதறி கிடப்பதால், வாகன ஓட்டிகள் சென்று வர சிரமப்படுகிறன்றனர்.

மேலும், புதுப்பட்டிக்கு சென்று வரும் அரசு பஸ் சிரமத்திற்கு இடையே சென்று வருகிறது.  மேலும், இப்பகுதி மக்கள் மட்டுமின்றி புதுப்பட்டியை சேர்ந்தவர்களும் சென்று வருவதால் அவர்களும் சிரமத்துடன் செல்ல வேண்டி உள்ளது.
எனவே, சிதிலமடைந்து காணப்படும் புதுப்பட்டி சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறியது, எங்களது பகுதியில் உள்ள தார்சாலை பராமரிப்பு பணிக்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜல்லிகற்களை கொட்டி வைத்தனர். ஆனால் சாலை அமைக்கும் பணி தொடங்காமல் உள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள், மாணவ, மாணவிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, விரைவில் சாலை அமைத்து தர வேண்டும். அதே மருத்துவமனைக்கு விரைவாக செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் அவசர தேவைக்கு மருத்துவ மனைக்கு கூட செல்ல முடியவில்லை என்றனர்.

Tags : road ,Rasipuram ,
× RELATED வத்தலக்குண்டு- அழகாபுரி சாலையில் ஆளை...