×

நாமக்கல்லில் காளான் உற்பத்தி இலவச பயிற்சி

நாமக்கல், ஜூன் 19: நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், வரும் 21ம் தேதி காலை 9 மணிக்கு காளான் உற்பத்தி என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. முகாமில் காளான் வளர்ப்பின் முக்கியத்துவம், காளான் வகைகளும், ரகங்களும், காளான் விதை உற்பத்தி, காளான் குடில் அமைத்தல், சிப்பிக்காளான் உற்பத்தி செய்யும்முறை, காளான் பதப்படுத்துதல், காளான் மதிப்பூட்டுதல் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பெயரை முன்பதிவு செய்து கொள்ளவேண்டும் என திட்ட ஒருங்கிணைப்பாளர் அகிலா கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : Namakkal ,
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை