மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

ஓசூர், ஜூன் 19: திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். ஆர்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஜெயராமன், செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, மாவட்ட குழு உறுப்பினர்கள் சேதுமாதவன், வெண்ணிலா, நாராயணமூர்த்தி, சிஐடியு மாவட்ட செயலாளர் பீட்டர், ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் வாசுதேவன், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன், ஆகியோர் கண்டன உரையாற்றினர். குடியிருப்போர் நல சங்க துணைத் தலைவர் சீனிவாசலு, விவசாயிகள் சங்க செயலாளர் தேவராஜ், நடைபாதை வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன், சீனிவாசன், விவசாய சங்க நிர்வாகி ராஜூ, வாலிபர் சங்க பொருளாளர் அகிலேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Marxist Party Demonstration ,
× RELATED ஓசூரில் பரபரப்பு ரவுடி மனைவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி