கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுகூட்டம்

சூளகிரி, ஜூன் 19: சூளகிரி தெற்கு ஒன்றியம் திமுக சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் தலைமையில் உத்தனபள்ளியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ், எம்எல்ஏ, மாவட்ட துணை செயலாளர் முருகன் எம்எல்ஏ மற்றும் ஒசூர் எம்எல்ஏ சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கொள்கை பரப்பு துணை செயலாளர் குடியாத்தம் குமரன் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு, மாவட்ட அவை தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்ராமையா, சாந்தி, மாவட்ட நிர்வாகிகள் சீனிவாசன், பாக்கியராஜ், ஷேக் ரஷீத், மற்றும் பாலசுப்பிரமணி நிர்வாகிகள் ராமசந்திரன், லட்சுமிகாந்த், மஞ்சு, ராதாகிருஷ்ணன், பாபு, லோகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Tags : Karunanidhi ,Birthday Party General Meeting ,
× RELATED வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலேயே...