ஆசிரியர் கூட்டணி கிளை துவக்கம்

ஊத்தங்கரை, ஜூன் 19: தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கிளை துவக்க விழா ஊத்தங்கரையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். ஆசிரியர் கணேசன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பொன்.நாகேஷ், மாம்.கி.ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ராஜ்குமார் வட்டார தலைவராகவும், கலைச்செல்வன் செயலாளராகவும் சிவகணேசன் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆசிரியர் செல்வராசு நன்றி கூறினார்.

× RELATED திருமாவளவன் பிறந்த நாள் விழா