×

2ம் கட்டமாக ஜமாபந்தி நிகழ்ச்சி

தர்மபுரி, ஜூன் 19: தர்மபுரி மற்றும் நல்லம்பள்ளியில் 2வது கட்டமாக ஜமாபந்தி நேற்று நடந்தது.  தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் கடந்த 13ம் தேதி முதற்கட்டமாக ஜமாபந்தி நடந்தது. 2வது கட்டமாக நேற்று தர்மபுரி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் லட்சுமி தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். நிகழ்ச்சியில் தாசில்தார்கள் ராதாகிருஷ்ணன், பழனியம்மாள், மாரிமுத்து, வினோதா, துணை தாசில்தார் வள்ளி, வருவாய் ஆய்வாளர்கள் சுகுமார், இளையராஜா மற்றும் விஏஓக்கள் தாமோதரன், சங்கர், பாலமுரளி, குமார், நாராயணன், சரவணன், பார்த்திபன், ெவங்கடேசன், சாக்கப்பன், பாஸ்கர், முருகன் உள்ளிட்ட வருவாய்துறையினர் கலந்து கொண்டனர்.இதே போல் நல்லம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமில் சப் கலெக்டர் சிவனருள் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். நிகழ்ச்சியில் தாசில்தார் இளஞ்செழியன், கலைசெல்வி, சுப்ரமணி, வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று 2வது நாளாக நடந்தது. தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமை வகித்தார். இதில், பொம்மிடிவரு வாய் பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்காளக கொடுத்தனர். அதில் பெரும்பாலானவர்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை கொடுத்தனர். பின்னர் அந்த மனுக்களை அந்தந்த பிரிவு அதிகாரிகளுக்கு கொடுத்து உடனடியாக நிவர்த்தி செய்யும்படி உத்தரவிட்டார். நேற்று கேத்திரெட்டிப்பட்டி, ரேகடஹள்ளி பொ.மல்லாபுரம், பொம்மிடி, பள்ளிப்பட்டி, பையநத்தம், மோளையானூர், மெணசி, ஆலாபுரம் உள்ளிட்ட 10 கிராமங்களில் கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. நாளை கடத்தூர் வருவாய் கிராமங்களில் கணக்குகள் சரிபார்ப்பு பணி நடைபெறும். பின்னர் 20ம் தேதி தென்கரைக்கோட்டை வருவாய் கிராமங்களில் கணக்குகள் சரிபார்க்கப்படும்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா