×

நீடாமங்கலம் அருகே 5 ஆண்டுகளாக தூர்வாராத மன்னப்பன் பாசன வாய்க்கால்

நீடாமங்கலம்,ஜூன்19: நீடாமங்கலம் அருகில் 5 ஆண்டுகளாக து£ர்ந்துள்ள பாசன வாய்க்கால் தூர்வாராததால் 276 ஏக்கர் நிலங்களை சாகுபடி செய்யமுடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்திலிருந்து தஞ்சை செல்லும் வழியில் கொண்டியார் சட்ரஸ் உள்ளது.இங்கு தொடங்கும் மன்னப்பன் பாசன வாய்க்கால் மதகு கடந்த 5 ஆண்டுகளாக தூர்ந்து தூர் வாரமுடியாதநிலையில் உள்ளது.இந்த இடத்தில் தூர் வார வேண்டுமென்றால் எந்த வாகனமும் செல்ல முடியாத நிலையில் ஆக்கிரமிப்புகள் உள்ளது.இதை எந்த அதிகாரியும் கண்டு கொள்வதில்லை.இந்த மன்னப்பன் பாசன வாய்க்கால் மேலபூவனூர் வரை பாசன வாய்க்காலாகவும்,பிறகு கொண்டியாற்றில் கலந்து வடிகாலாகவும் பிறகு இராயபுரம் வரை பாசன வாய்க்காலாக சென்று அங்குள்ள பாமனியாற்றில் வடிகாலாக கலக்கிறது.இந்த வாய்க்கால் சுமார் 5 கி.மீட்டர் வரை செல்கிறது.இந்த வாய்க்கால் மேல பூவனூர் வரை சுமார் 276 ஏக்கருக்கு பாசனநீர் கொடுக்கும்.

இது தொடர்பாக வீரவநல்லூர் சிறு விவசாயி அசோக் கூறுகையில், மன்னப்பன் பாசன வாய்க்கால் மதகு தூர்வாரி 5 ஆண்டுகள் ஆகிறது.ஆண்டுதோறும் சிறு குறு விவசாயிகள் நாங்களே சில இடங்களில் தூர் வாரி தண்ணீர் கொண்டு செல்லும் போது ஏரி பாய்வதில்லை.எங்கள் பகுதியில் 276 ஏக்கரில் 72 ஏக்கர் நிலம் நில உச்சவரம்பு சட்டத்தில சீலிங் நிலமாக உள்ளது.இந்த நிலங்களில் 40 ஏக்கர் நிலம் பாசனம் செய்ய முடியாமல் உள்ளது. பாசன வாய்க்காலை தூர்வார வேண்டுமென காளாச்சேரி ஊராட்சி சார்பில் மேல பூவனூர் கிராமத்திலிருந்து கடந்த 2 மாதங்களுக்கு முன் திருவாரூர் கலெக்டரிடம் மன்னப்பன் பாசன வாய்க்காலை தூர் வார வேண்டுமென மனு கொடுத்துள்ளோம் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு முன் கூட்டியே வாய்க்காலை தூர்வாரா விட்டால் அப்பகுதி விவசாயிகளை திரட்டி மிகப்பெரிய சாலை மறியல் போராட்டம் செய்ய உள்ளோம் என்றார்.



Tags : Nedumangalam ,
× RELATED நீடாமங்கலம் திரவுபதியம்மன் கோயிலில் தீமிதி விழா