×

திருவாரூரில் ஜமாபந்தி நிகழ்ச்சி முதியோர் ஓய்வூதியத்திற்கான உத்தரவு வழங்கல்

திருவாரூர், ஜூன் 19: திருவாரூரில் நேற்று நடைபெற்ற வருவாய்த்துறையின் ஜமாபந்தி கணக்குகள் நிகழ்ச்சியில் 28 பேருக்கு முதியோர் ஓய்வூதியம் தொடர்பான உத்தரவினை சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஜெயதீபன் வழங்கினார்.திருவாரூர் மாவட்டத்தில் 1428ம் வசலிக்கான வருவாய் துறையின் ஜமாபந்தி கணக்குகள் முடித்தல் நிகழ்ச்சியானது கடந்த 6ம்தேதி முதல் துவங்கி அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நேற்று வரை நடைபெற்றது.  அதன்படி மன்னார்குடி தாலுகா அலுவலகத்தில் கலால் உதவி ஆணையர் தலைமையிலும், நன்னிலத்தில் மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் தலைமையிலும், திருவாரூரில் டி.ஆர்.ஒ தலைமையிலும், குடவாசலில் ஆர்.டி.ஒ தலைமையிலும், வலங்கைமானில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் தலைமையிலும், திருத்துறைபூண்டியில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலும், நீடாமங்கலத்தில் கலெக்டர் ஆனந்த் தலைமையிலும், கூத்தாநல்லூரில் மன்னார்குடி ஆர்டிஒ தலைமையிலும் இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியானது துவங்கியது.

அதன்படி திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவி தொகை, புதிய ரேஷன் கார்டுகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து நேற்று முன்தினம் வரையில் மொத்தம் 454 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 165 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இந்நிலையில் இறுதி நாளான நேற்று குன்னியூர் வருவாய் சரகத்திற்குட்பட்ட குன்னியூர், வேப்பத்தாங்குடி, வஞ்சியூர், திருக்காரவாசல், பின்னவாசல், உமாமகேஷ்வரபுரம், புது£ர், ராதாநல்லூர், கடுவங்குடி, திருநெய்ப்பேர் ஆகிய 10 கிராமங்களுக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் மொத்தம் 132 மனுக்கள் பெறப்பட்டது.இதில்28 பேருக்கு முதியோர் ஓய்வூதியம், 9 பேருக்கு பட்டா பெயர் மாற்றம், 14 பேருக்கு புதிய ரேஷன் கார்டு என மொத்தம் 51 பேருக்கு இதற்கான உத்தரவினை சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஜெயதீபன் வழங்கினார். நிகழ்ச்சியில் தாசில்தார் நக்கீரன், மண்டல துணை தாசில்தார் சரவணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Tiruvarur ,
× RELATED 3 ஆண்டாக உரிய நேரத்தில் தண்ணீர் திறப்பு பருத்திக்கு நல்ல விலை கிடைக்கிறது