அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி மீனவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, ஜூன்19: கஜா புயலால் பாதிக்கப்பட்ட முத்துப்பேட்டை மீனவர்களின் படகுகளுக்கு நிவாரணம் வழங்குவதில் மோசடி நடைபெற்றதாக கூறி திருத்துறைப்பூண்டியில் தாசில்தார் அலுவலம் முன்பு மீனவர்கள்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு கஜா புயலால் கடுமையாகபாதிக்கப்பட்டமாவட்டத்தில் திருவாரூர் மாவட்டம் ஒன்றாகும் இதில் முத்துப்பேட்டை பகுதியில் மிகவும் கடுமையாகபாதிக்கப்பட்டது.இதனால் மீனவர்களின் படகுகள் கடுமையாக சேதமடைந்தது இதற்கு நிவாரணம் கோரி கலெக்டரிடம் மனுஅளிக்கப்பட்டநிலையில் இதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டது சுமார் 600க்கும் மேற்பட்டமீனவஉறுப்பினர்கள்உள்ள நிலையில் 300 பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால் அனைவருக்கும் வழங்கப்பட்டுவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து மீனவர்கள்அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது பல்வேறு குளறுபடிகள்நடைபெற்றுஉள்ளதாக தெரிய வந்துள்ளது. மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரியநடவடிக்கை எடுத்து அனைவருக்கும் இந்தநிவாரணத்தை முறையாகவழங்க வேண்டும் என்பதைவலியுறுத்தி முத்துப்பேட்டை மீனவர்கள்சங்கதலைவர் நிஜாம் தலைமையில் மீனவர் சங்கத்தினர் திருத்துறைப்பூண்டி தாலுக்கா அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Tags : fishermen association ,
× RELATED தாழ்வாக தொங்கும் உயர் அழுத்த...