×

மன்னார்குடி குட்டக்கரை நகராட்சி துவக்கப்பள்ளிக்கு போதிய ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும்

மன்னார்குடி, ஜூன்19: மன்னார்குடி குட்டக்கரை நகராட்சி துவக்கப்பள்ளிக்கு மாணவர்களின் எண்ணி க்கைக் கேற்ப கூடுதல் ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார்குடி நகரத்தின் சேனியத் தெரு, கிருஷ்ணன் தெருவை இணைக்கும் சிறிய குறுக்கு சந்தில் உள்ளது குட்டக்கரை நகராட்சி துவக்கப்பள்ளியாகும்.இப்பள்ளியில் 12 மாணவர்கள் மட்டும் பயின்று வந்ததால் ,பத்து ஆண்டு களுக்கு முன்பு மாவட்டத்தில் மூடுவதற்காக பரிசீலிக்கப்பட்ட பள்ளிகளில் இதுவும் ஒன்று. இதனால் இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பொறுப்பு ஏற்க யாரும் முன்வராத சூழலில் விஜயலட்சுமி என்பவர் தலைமை ஆசிரி யராக கடந்த 2011 ம்ஆண்டு பணியில் சேர்ந்து பணியாற்றினார்.2013-14 கல்வியாண்டில் 20 மாணவர்களை சேர்த்து ஆங்கில வழி கல்வியை முதலில் துவக்கினார். திருவாரூர் மாவட்டத்தில் ஆங்கில வழி கல்வி துவக்கிய முதல் நகராட்சி தொடக்கப்பள்ளியும் இதுவேயாகும். 2014-15 கல்வி ஆண்டு 38, 2015-16 கல்வி ஆண்டு 61, என மாணவர்கள் எண்ணி க்கை மளமளவென உயர்ந்து, இன்று இந்த பள்ளியின் மாணவர்கள் எண்ணிக் கை 110 ஐஎட்டியுள்ளது. மேலும் மாணவர்கள் சேர்க்கையும் தொடர்ந்து நடந்து வருகிறது.

அடுத்த கல்வி ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை 150 தாண்டும் என அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவிக் கிறார் கள். நெம்மேலி, தருசுவேலி, சவளக்காரன் போன்ற பல சுற்று வட்டார கிராம ங்களில் இருந்து பெற்றோர்கள் கூட்டாக ஆட்டோ மற்றும் வேன்கள் வாடகை க்கு அமர்த்தி குழந்தைகளை இந்த அரசுப்பள்ளிக்கு அனுப்பி படிக்க வைப்பது ஆச்சரியமான செய்தியாகும்.ஒரு அரசு துவக்க பள்ளியில் மாணவர் எண்ணிக்கை 90 ஐ தாண்டினால் அப்பள்ளிக்கு 4 ஆசிரியர்கள் நியமிக்க பட வேண்டும் என்பது அரசு விதி யாகும். ஆனால் இப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை 110 ஐ தாண்டியும் கடந்த நான்கு ஆண்டுகளில் இப்பள்ளிக்கு ஒரு ஆசிரியரை மட்டுமே கூடு தலாக கல்வித்துறை நியமித்து இருக்கிறது. தலைமை ஆசிரியரையும் சேர் த்து மூன்று ஆசிரியர்கள் தற்போது உள்ளனர். தேவையான ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்பது வேதனை அளிப்பதாக மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.மேலும் பள்ளி வளாகத்திற்கு உள்ளே இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டி டத்தை எடுத்து விட்டு புதிய கட்டிடம் கட்ட பெற்றோர் சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் நகராட்சி நிர்வாகம் முன்வராதது ஏற்புடையதல்ல என்றும் பெற்றோர்கள் கூறுகின்றனர்.மன்னார்குடி நகரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் ஒரே தொடக்கப் பள்ளி என்ற அந்தஸ்த்தை பெற்று இருக்கும் குட்டக்கரை நகராட்சி தொடக்கப்பள்ளியில் வகுப்புகள் நடத்த இடம் இன்றி, போதிய ஆசிரியர்கள் நியமனம் இன்றி பரிதவிக்கும் அவலநிலையில் உள்ளது

எனவே மன்னார்குடி குட்டக்கரை நகராட்சி துவக்கப்பள்ளிக்கு மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் ஆசிரியர் நியமனம் உடன் செய்யப்பட வேண் டும், பள்ளியில் சேதமடைந்து கிடக்கும் பழைய கட்டிடத்தை அகற்றி விட்டு மாணவர்களுக்கு போதிய வகுப்பறைகள் கட்டி தரப்பட வேண்டும் என மாண வர்களும், பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெற்றோர் கோரிக்கைஒரு அரசு துவக்க பள்ளியில் மாணவர் எண்ணிக்கை 90 ஐ தாண்டினால் அப்பள்ளிக்கு 4 ஆசிரியர்கள் நியமிக்க பட வேண்டும் என்பது அரசு விதி யாகும். ஆனால் இப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை 110 ஐ தாண்டியும் கடந்த நான்கு ஆண்டுகளில் இப்பள்ளிக்கு ஒரு ஆசிரியரை மட்டுமே கூடு தலாக கல்வித்துறை நியமித்து இருக்கிறது.விவசாயிகள்வாழ்வாதாரம் பாதிப்பு... ஏக்கருக்குரூ.25ஆயிரம் நிவாரணம்தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் விசுவநாதன் கூறியதாவது: கடந்த 8ஆண்டுகளாக குறுவைக்கு காவிரி தண்ணீர் பெற்று தராததால் 6லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது. இதனால் குறுவை சாகுபடி விவசாயிகளின் வாழ்வாதாரம் சிதைந்துள்ளது. மேலும் இதனால் 50லட்சம் கூலி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.குறுவை சாகுபடிக்கு காவிரி நீர் கிடைத்து விடும் என நம்பியிருந்த விவசாயிகள் ஏமாந்து போய் உள்ளனர். அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஏக்கருக்கு ரூ.25ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். 2019ம் ஆண்டிற்கான குறுவை சாகுபடிக்கான தண்ணீரை பெறறு தரவும், சம்பா சாகுபடி செய்ய முன் எச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தலின்படி மாதம், மாதம் கூட்டம் நடத்தி தண்ணீரை பெற்று சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பருவமழை காலங்களில் வருகின்ற வெள்ள நீரை ஏரிகளிலும், தடுப்பணைகளிலும் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : teachers ,boot school ,Mannargudi ,
× RELATED கல்வி அதிகாரி நேரடி விசாரணை...