×

திருத்துறைப்பூண்டியில் பா.ரஞ்சித்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் திருவாரூர் மாவட்டத்தில் அரசு விடுதிகளில் மாணவர் சேர்க்கை தகுதியானோர் விண்ணப்பிக்கஅழைப்பு

திருவாரூர், ஜூன் 19: திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் அரசு விடுதிகளில் சேர்வதற்கு நாளை மறுதினத்திற்குள் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ மற்றும் மாணவிகளுக்கென 21 பள்ளி மாணவ, மாணவியர் விடுதிகளும், 7 கல்லூரி மாணவர், மாணவியர் விடுதிகளும் என மொத்தம் 28 விடுதிகள் அரசால் நடத்தப்பட்டு வருகிறது.பள்ளி விடுதிகளில் 4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பாலிடெக்னிக், ஐடி, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளும் சேரத்தகுதியுடைவர்கள். அனைத்து விடுதி மாணவர்களுக்கும் உணவு மற்றும் தங்கும் வசதியும் அளிக்கப்படும் நிலையில் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சீருடைகளும் வழங்கப்படும்.இந்த விடுதிகளில் சேர்வதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ. ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் நாளை மறுதினமும் (20ந் தேதி), கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை அடுத்த மாதம் 15ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : Demonstration ,Tiruvarur district ,
× RELATED திருத்துறைப்பூண்டி 17வது வார்டு...