×

கும்பகோணம் பகுதி கடைகளில் 4 டன் பிளாஸ்டிக் பொருள், 250 கிலோ குட்கா பறிமுதல்

கும்பகோணம், ஜூன் 19: கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் தெற்குவீதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகள், கப்புகள், தட்டுகள் விற்பனை செய்து வருவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாகேஸ்வரன் கோயில் தெற்குவீதியில் உள்ள ஹோட்டல் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் நகராட்சி நகர் நல அலுவலர் பிரேமா தலைமையில் துப்புரவு ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன், மணிகண்டன், முருகானந்தம், ஆகியோர் சோதனையிட்டனர்.

அப்போது கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், பைகள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.1.75 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.கும்பகோணம் விஜயேந்திரர் மடத்துத்தெருவில் உள்ள பிளாஸ்டிக் கடை வைத்திருந்த ரானாராம் (35) என்பவரது கடையில் 2 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.பின்னர் அதன் அருகிலிருந்த அவருடைய மற்றொரு குடோனை சோதனை செய்ய வேண்டுமென நகர்நல அலுவலர் கேட்டபோது 1.30 மணி நேரம் காக்க வைத்தார். பின்னர் ஜெயின் சமூக நிர்வாகிகள் முன்பு குடோனின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற ஆய்வு செய்தபோது ஒரு டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களையும், 250 கிலோ எடையில் தடை செய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட குட்காவை மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்து குடோனின் உரிமையாளர் ரானாராமுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர். மேலும் தலைமறைவான ரானாராம் குறித்து மேற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது.



Tags : area ,Kumbakonam ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...