சித்தேஸ்வரர் கோயிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு

திருக்காட்டுப்பள்ளி, ஜூன் 19: திருச்சினம்பூண்டி சித்தேஸ்வரர் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.திருக்காட்டுப்பள்ளி அடுத்த திருச்சினம்பூண்டி சித்தேஸ்வரர் கோயில் திருக்காட்டுப்பள்ளி, திருநியமம், திருச்சினம்பூண்டி, திருக்கானூர், திருபொதகிரி, திருச்சடைவளந்தை, திருச்செந்தலை ஆகிய 7 சிவன் கோயில்களை உள்ளடக்கி சப்தஸ்தான (ஏழுர்) திருவிழா நடந்த சிவதிருத்தலங்களில் ஒன்று. இக்கோயிலில் பழமையான ராமாயண காட்சிகள் அற்புத சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் யுனஸ்கோ பாரம்பரிய சின்னமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்த கோயிலில் பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. மாலை சித்தேஸ்வரர், சித்தாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம், புஷ்ப அலங்காரம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சகஸ்ராமம் படித்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


Tags : Shiva ,Siddeshwara ,
× RELATED சிவ வழிபாடு