தினமும் விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை இறால்மீன் விலை வீழ்ச்சியால் இழப்பை சந்தித்து வரும் மீனவர்கள் கந்தர்வகோட்டையில் மக்களை முட்டி தள்ளிய காளைகள் பட்டியில் அடைப்பு

கந்தர்வகோட்டை, ஜூன் 19: கந்தர்வகோட்டை நகரில் சாலையில் செல்பவர்களை முட்டித்தள்ளிய காளைகளை பிடித்து பட்டியில் அடைத்தனர்.கந்தர்வகோட்டையில் நகர் பகுதியில் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை தெருக்களில் சுற்றி திரியும் காளைகள் முட்டி தள்ளும் சம்பவம் சமீபத்தில் அதிகமாக நடந்தன. இதில் சில தினங்களுக்கு முன் வடுகப்பட்டியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அதனைத் தொடர்ந்து இண்டு தினங்கள் கழித்து மற்றொரு நபரை காளை மாடு முட்டித் தள்ளியதில் லேசான காயத்துடன் தப்பினார். இந்நிலையில் தெருக்களில் திரியும் காளைகளை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் ஊராட்சி பணியாளர்கள் எந்த நடவடிக்கை எடுத்தாலும் மேல் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று எடுக்க வேண்டிய சூழ்நிலையால் செயல்கள் தாமதப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொதுமக்கள் விடுத்த கோரிக்கையினை ஏற்று கந்தர்வகோட்டை கடைவீதி மற்றும் பேருந்து நிலைய பகுதிகளில் பொதுமக்களை முட்டி தள்ளிய காளையை ஆட்கள் மூலம் பிடித்து பட்டியில் அடைத்துள்ளனர். இதனால் கந்தர்வகோட்டையில் பேருந்து நிலையம் பகுதியில் மக்கள் பயமின்றி நடமாடுகின்றனர்.
Tags : Fishermen ,
× RELATED மீனவ சமுதாய மக்களின் பாதுகாப்பினை...