நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிடப்படுமா? உலக இசைதினம் அரசு இசைப்பள்ளியில் இன்று இசைப்போட்டி

புதுக்கோட்டை, ஜூன் 19: உலக இசை தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அரசு இசைப்பள்ளியில் இன்று இசைப்போட்டிகள் நடக்கிறது.இதுகுறித்து கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சரால் 2018-19ம் ஆண்டு துறை மானிய கோரிக்கையில் உலக இசை தினம் ஜூன் 21ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழகத்தில் அரசு இசை கல்லூரிகள் மற்றும் மாவட்ட அரசு இசைப்பள்ளிகள் வாயிலாக ஆண்டுதோறும் இசைநிகழ்ச்சிகள் மற்றும் இசை போட்டிகள் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதன்படி உலக இசை தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை திலகர் திடலில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில் இன்று (புதன்கிழமை) இசை போட்டிகள் காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

இசைப்போட்டிகள் 15 வயது முதல் 30 வயது வரையிலானவர்களுக்கு நான்கு பிரிவுகளில் நடத்தப்படும். தமிழிசை போட்டி, கிராமிய பாடல் போட்டி, முதன்மை கருவியிசை போட்டி (நாதஸ்வரம், வீணை, வயலின், புல்லாங்குழல், மாண்டலின், கோட்டுவாத்யம், சாக்ஸபோன், கிளாரிநெட் போன்றவை), தாள கருவிஇசைப் போட்டி (மிருதங்கம், தவில், கடம், கஞ்சிரா, மோர்சிங் போன்றவை).இந்த போட்டிகளில் தமிழில் அமைந்த பாடல்கள் மட்டுமே பாடவோ, இசைக்கவோ வேண்டும். போட்டியாளர்கள் தங்களுக்கு தேவையான இசைக்கருவிகளை அவரவர் கொண்டு வரவேண்டும்.போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல்பரிசு ரூ.3 ஆயிரமும், 2ம் பரிசு ரூ.2 ஆயிரமும், 3ம் பரிசு ரூ.ஆயிரமும் வழங்கப்படும். பங்குபெறும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் உலக இசை தினத்தை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) சிறப்பு நிகழ்ச்சிகள் அரசு இசை பள்ளியின் சார்பில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.Tags : charity ,Music Competition ,
× RELATED தாமிரபரணியில் அசுத்தம் செய்வதை...