×

தமிழகம் முழுவதும் பூசாரிகள் நலவாரிய உறுப்பினர்கள் புதுப்பிக்கும் பணியில் தொய்வு விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா

தா.பழூர், ஜூன் 19: அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தலைப்பின்கீழ் விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா நடந்தது. இதில் கடம்பூர், திருபுரந்தான், அமிர்தராயன்கோட்டை கிராமத்தில் உள்ள கூட்டு பண்ணைய உறுப்பினர்கள் 50 பேர் கொண்ட குழு அமைத்து சோழன்மாதேவி கிராமத்தில் உள்ள கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் நிகழ்ச்சி நடந்தது.வேளாண்மை உதவி இயக்குநர் முகமது பாரூக், விவசாய உற்பத்தியாளர் குழுவின் செயல்பாடுகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று பேசினார். நுண்ணீர் பாசன முறை, அங்கக வேளாண்மை குறித்து கிரீடு வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் அழகுகண்ணன் விவசாயிகளிடத்தில் பேசினார். மக்காச்சோளத்தில் படைப்புழு கட்டுப்படுத்தும் முறைகள், உழவர் உற்பத்தியாளர் குழு செயல்பாடு குறித்து வீடியோ கண்காட்சி மூலம் வேளாண் அறிவியல் மைய தொழில் நுட்ப வல்லுநர் ராஜாஜோஸ்லின் விளக்கம் அளித்தார். மண்மாதிரி எடுத்தல் குறித்து வேளாண் அறிவியல் மைய தொழில் நுட்ப வல்லுநர் அறிவுச்செல்வி செயல்விளக்கம் அளித்தார். அட்மா திட்டம் குறித்து அட்மா திட்ட தொழில் நுட்ப மேலாளர் சகாதேவன் எடுத்து கூறினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் உஷா நிறைவாக நன்றி கூறினார்.நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிடப்படுமா?அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூசாரிகளை பாதுகாத்திட வேண்டு மென சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 12வாரத்தில் அரசானை பிரப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதி மன்றத்தால் உத்திரவிடப்பட்டது.

Tags : Pleasure farmers ,priests ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...