×

ஜூலை 2ம் தேதி கடைசி சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருப்பவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு சமுதாயத்தில் கண்டறியக்கூடியதாகவும், அளவிட கூடியதாகவும் இருக்க வேண்டும்

.அரியலூர், ஜூன் 19: வி.கைகாட்டி பகுதி கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வி.கைகாட்டி நான்கு ரோடு பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், பைகள் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் வி்ற்பனை செய்யப்படுகிறதா என்று அதிகாரிகள் சோதனை நடத்தினர். வட்டார வளர்ச்சி அலுவலர் கலையரசு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உஷா ராணி, சுகாதார ஆய்வாளர் மணிகண்டன், ஊராட்சி செயலாளர்கள் முருகேசன், பாஸ்கர் ஆகியோர் கடைகளில் சோதனை நடத்தினர்.இதில் 12 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags : Volunteers ,
× RELATED அண்டாவை தூக்கிச் சென்ற பறக்கும்படை; பிரியாணி போச்சே தொண்டர்கள் புலம்பல்