சங்க செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல் கல்பனா சாவ்லா விருது பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் 23ம் தேதி கடைசி

நாகை, ஜூன்19: இயற்கை இடர்பாடுகள் உள்ளிட்ட நிகழ்வுகளில் துணிச்சலாக செயல்பட்ட பெண் நபர்களுக்கு வழங்கப்படும் கல்பனா சாவ்லா விருதை பெற வரும் 23ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம் என்று கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
கல்பனா சாவ்லா விருது 2019வது இயற்கை இடர்பாடுகள், சாலை விபத்துகள், தீ விபத்துகள், நீர் விபத்துகள், திருட்டு போன்ற நிகழ்வுகளில் துணிச்சலாக செயல்பட்ட பெண் நபர்களுக்கு வழங்கப்படுகிறது. நாகை மாவட்டத்தில் இந்த விருதை பெற தகுதியான பெண் நபர்கள் இருந்தால் விண்ணப்பங்களை நாகை கலெக்டர் அலுவலகம் முதல் தளத்தில் இ பிரிவில் சென்று விண்ணப்பங்களை பெற்று அதே முகவரிக்கு வரும் 23ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


Tags : meeting ,Executive Committee ,
× RELATED குழந்தைகள், பெண்களுக்கு நஷ்டஈடு...