நாகையில் 21ம் தேதி நடக்கிறது கூரை வீட்டிற்கு தீ வாலிபருக்கு வலை

நாகை, ஜூன்19: நாகூர் சிவன்கோயில் கீழமட வளாகத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார்(35). இவருக்கும் அவரது உறவினருக்கும் கடந்த சில தினங்களாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை தினேஷ்குமார் கூரை வீடு திடீரென தீப்பிடித்து வீட்டில் வைத்திருந்த பொருட்கள் சேதமடைந்தது. தகவல் அறிந்த நாகூர் தீயணைப்பு அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதுகுறித்து தினேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமார் வீட்டிற்கு தீ வைத்த நபரை தேடி வருகின்றனர்.


Tags : Snag ,roof house ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் மைய...