×

விவசாயிகள் குற்றச்சாட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் 11 மாத சம்பளம் கேட்டு உண்ணாவிரத போராட்டம்

மயிலாடுதுறை, ஜூன் 19: நாகை, திருவாரூர் மாவட்டங்களிலேயே கூட்டுறவு சர்க்கரை ஆலை மயிலாடுதுறையில் உள்ள தலைஞாயிறு நடிப்பிசைப்புலவர் கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை ஒன்று மட்டுமே. 1987ல் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்ட இந்த ஆலை 1250 டன் அரவை திறனுடன் செயலாற்றி வந்தது.இந்தியாவிலேயே கரும்பு விவசாயிகளுக்கு போனஸ் அளித்த ஒரே சர்க்கரை ஆலையாக திகழ்ந்தது இந்த ஆலைதான். காலப்போக்கில் நலிவடைந்ததால் கடந்த 6 ஆண்டுகளாக கரும்பு விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் குதித்த வண்ணம் இருந்தனர். 2015-16 அரவைப்பருவம் 2015 டிசம்பரில் துவங்க வேண்டியது, 2016 ஏப்ரல் மாதம் அரவை துவங்கியது. ஜூலை வரை அரவை நடைபெற்று முடிந்தது. 2016-17, 2017-18, 2018-19 வரை ஆலை அரவை இல்லாமலும் விவசாயிகளுக்கு ரூ.8 கோடி நிலுவைத் தொகையும் வழங்கவில்லை. இதனால் பல கரும்பு விவசாயிகள் தங்களது கரும்பு விவசாயத்தை தவிர்த்துவிட்டனர். தற்பொழுது இந்த ஆலைக்காக கரும்பு பயிரிடும் அளவு 2000 ஏக்கர் மட்டுமே மிச்சம் உள்ளது. பயிரிடும் கரும்பை மற்ற ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் ரூ.55 கோடி கடன் வழங்க அறிவித்தார். அந்த தொகையும் கிடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஆலையில் தற்பொழுது 126 பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். அவர்களுக்கு கடந்த 11 மாதமாக சம்பளம் வழங்கவில்லை, அதிகாரிகளை கேட்டால் சம்பளத்திற்காக ரூ.7கோடி அரசிடம் கேட்டுள்ளோம் அதுவந்ததும் வழங்கப்படும் என்கிறார். இதே கருத்தைத்தான் தொடர்ந்து 3 ஆண்டுகளாக கூறிவருகின்றனர். இதனால் விரக்தியடைந்த தொழிலாளர்கள் முடிவெடுத்து சிஐடியூ தலைவர் , கமலநாதன் தலைமையில் 70க்கும் மேற்பட்டோர் ஆலையின் முன்பாக அமர்ந்து உண்ணா விரதப்போட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால் மீண்டும் போராட்டம் தொடரும் என்றனர்.


Tags : Accusation Cooperative Sugar Factory Workers ,
× RELATED பாலாலய நிகழ்ச்சியுடன் துவக்கம்...