×

2 நாட்கள் நடைபெறுகிறது கரூர் நகராட்சி ராயனூரில் பராமரிப்பின்றி சேதமடைந்த 235 ஆண்டு பழமையான போர் நினைவு சின்னம்

கரூர், ஜூன் 19: கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூரில் 235 ஆண்டு பழமை வாய்ந்த போர் நினைவுச் சின்னத்தை சீரமைத்து பராமரிக்க தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூரில் இருந்து ஈசநத்தம் செல்லும் சாலையில் ராயனூர் பகுதியில் போர் நினைவுச் சின்னம் உள்ளது. கி.பி 18ம் நுற்றாண்டில் சேர மன்னர்கள் கரூரை ஆட்சி செய்தனர். சேர மன்னர்களின் கோட்டை கரூர் அமராவதி ஆற்றின் வடகரையில் அமைந்திருந்தது.கரூர் கோட்டை கி.பி 18ம் நூற்றாண்டில் திப்பு சுல்தான் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. 1780ம் ஆண்டு முதல் 1784 ஆண்டு வரை இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போரின் ஒரு பகுதி கரூரிலும் நடைபெற்றது.கரூர் கோட்டையை கைப்பற்றும் வகையில் ஆங்கிலேய படையினருக்கும், அதனை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் திப்பு சுல்தான் படையினருக்கும், 1783ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கரூரில் போர் நடைபெற்றது. போரின் இறுதியில் கரூர் கோட்டை ஆங்கிலேயர் வசமானாலும், போரின் படைப்பிரிவு தலைவர் ஒருவரும், 19 ஐரோப்பியர்களும் கொல்லப்பட்டனர். 30 போர் வீரர்கள் படுகாயமடைந்தனர்.

ஆங்கிலேயர்கள் கரூர் கோட்டையை கைப்பற்றியதை நினைவு கூறும் வகையிலும், இறந்த வீரர்களின் நினைவை போற்றும் வகையிலும் ராயனூரில் போர் நினைவுச் சின்னம் அமைத்து ஸ்தூபி அமைக்கப்பட்டு கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.கிட்டத்தட்ட 235 ஆண்டுகளுக்கு முன்பு ராயனூரில் ஆங்கிலேயர்களுக்கும், திப்பு சுல்தான் படையினருக்கும் இடையே கரூர் கோட்டையை கைப்பற்ற நடந்த போரின் நினைவுச் சின்னமாக இன்றைக்கும் இந்த பகுதியில் உள்ளது.ஆனால் இதன் நிலைதான் மிகவும் மோசமாக உள்ளது. நினைவுச் சின்னத்தை சுற்றிலும் அதிகளவு ஆக்கிரமிப்புகள் உள்ளதோடு உட்புறம் சேதமடைந்தும், பழுதடைந்தும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.இதனை சீரமைத்து அனைவரும் பார்வையிடும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் உள்ளது. எனவே பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவுச் சின்னத்தை போற்றி பராமரிக்க தேவையான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களாலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : municipality ,Karur ,Riyanur ,
× RELATED திருப்பத்தூர் நகராட்சியில் பரபரப்பு...