×

குழந்தைகள் காப்பகத்தில் அத்துமீறல் எஸ்ஐக்கு ₹50 ஆயிரம் அபராதம்

சென்னை, ஜூன் 19:  காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரேச்சல் கலைச்செல்வி. மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த மனுவில், நாங்கள் குழந்தைகள் காப்பகம் ஒன்றை நடத்தி வருகிறோம். கடந்த 2012ம் ஆண்டு சோமங்கலம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சின்னத்துரை, ஒரு புகார் சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்காக  எங்களுக்கு சொந்தமான குழந்தைகள் காப்பகத்துக்குள் அத்துமீறி நுழைந்தார்.

பின்னர், மாணவிகள் தங்கும் அறை, விடுதி காப்பாளர் அறை உள்பட அனைத்து அறைகளிலும் இரவு 9 மணி வரை பெண் போலீசார் இல்லாமல் சோதனை நடத்தினார். எனவே, சப் இன்ஸ்பெக்டர் சின்னத்துரை மீது உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என கூறியிருந்தார்.மனுவை விசாரித்த நீதிபதி துரை ஜெயச்சந்திரன், சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது சப் இன்ஸ்பெக்டர் சின்னத்துரை மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. இதற்காக அவருக்கு ₹50 ஆயிரம் அபராதம்  விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு, மனுதாரருக்கு 4 வாரத்துக்குள் வழங்கிவிட்டு சப் இன்ஸ்பெக்டரிடம் இருந்து வசூலித்து கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.



Tags : children ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...