கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கும்மிடிப்பூண்டி, ஜூன் 19:  கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை  கரடிபுத்தூர், கண்ணன்கோட்டை, சிறுவாடா, சின்னகுழியூர்,  கொல்லானூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.  இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 11 மற்றும் 12 வகுப்புகளில் போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. தற்போது பாடவாரியாக படிக்க முடியாமல் மாணவர்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர்.  இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் மாணவர்கள் கேட்டபோது, ‘’இன்னும் சில நாட்களில் ஆசிரியர்கள் வந்துவிடுவார்கள்’’ என்று கூறியுள்ளார். ஆனால் பள்ளி திறந்து ஏரக்குறைய 20 நாட்கள் ஆகியும் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்ைல.

 இதனால், விரக்தி அடைந்த மாணவ, மாணவிகள் நேற்று காலை வகுப்புக்கு வந்ததும், திடீரென பள்ளி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தலைமையாசிரியர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் பயன்  இல்லை.  
 மேலும் நாளையும் (இன்று) உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்தனர்.

Tags : government school ,Gummidipondi ,
× RELATED முத்துப்பேட்டையில் அக்டோபர் முதல்...