×

டி.ஜெ.எஸ் மேல்நிலைப்பள்ளியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா

கும்மிடிப்பூண்டி, ஜூன் 19: கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளியில் விஜிபி உலக தமிழ் சங்கம் சார்பில்  நேற்று திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த சிலை திறப்பு விழாவிற்கு, டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். கல்வி குழும செயலாளர் டி.ஜெ.ஆறுமுகம், துணை தலைவர்  டி.ஜெ.தேசமுத்து, இயக்குனர்கள் ஆ.பழனி, ஆ.விஜயகுமார், ஆ.கபிலன், தே.தினேஷ், கோ.தமிழரசன், நிர்வாக அலுவலர் ஏழுமலை, பள்ளி முதல்வர் ஞானபிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் விஜிபி தமிழ் சங்கம் சார்பில்  45வது திருவள்ளுவர் சிலையை விஜிபி உலகத்தமிழ் சங்க தலைவர் வி.ஜி.சந்தோசம் திறந்து வைத்தார்.

விழாவில் பேசிய டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் பேசுகையில், “மாணவர்கள் தினமும் ஒரு குறளை கற்பதோடு, ஒவ்வொரு பாட வேளையிலும் ஒரு குறளை படித்து பாடங்களை ஆசிரியர்கள் துவக்க வேண்டும்” என  அறிவுறுத்தினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக நீதியரசர் டி.என்.வள்ளிநாயகம் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில், தமிழறிஞர் வ.விஜயரங்கன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அறிஞர்கள் மற்றும் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

Tags : opening ceremony ,Thiruvalluvar ,DJ HS Higher Secondary School ,
× RELATED கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் கிளை திறப்பு விழா