×

திருவள்ளூர் நகராட்சியில் தடை செய்யப்பட்ட 300 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

திருவள்ளூர், ஜூன் 19: திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஆணையர் உத்தரவின்பேரில் நடத்திய திடீர் ஆய்வில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 300 கிலோ பறிமுதல் செய்யப்பட்டதோடு, ரூ.3 ஆயிரம்  அபராதமும் விதிக்கப்பட்டது.திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பூக்கடைகள், பழக்கடைகள், ஸ்வீட் கடைகள் மற்றும் மளிகை கடைகளில் நேற்று நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி உத்தரவின்பேரில், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், சுகாதார  ஆய்வாளர் ரமேஷ் மற்றும் ஊழியர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கடைகள் மற்றும் ஓட்டல்களில் பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளதா என ஆய்வு செய்தபோது, அங்கு பயன்பாட்டுக்கு வைத்திருந்த, அரசால் தடை செய்யப்பட்ட 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், தடையை  மீறி பிளாஸ்டிக் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக ₹3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.இதுகுறித்து ஆணையர் மாரிச்செல்வி கூறுகையில், ‘’நகராட்சியில் தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளது. இனி கடைகளில் ஆய்வு நடத்தும்போது, பிளாஸ்டிக் பயன்பாடு கண்டுபிடிக்கப்பட்டால், அதிகபட்ச தொகை அபராதமாக  விதிக்கப்படுவதோடு, குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்’’என்றார்.

Tags : municipality ,Tiruvallur ,
× RELATED சொத்துவரி செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை