வாலாஜாபாத் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

வாலாஜாபாத், ஜூன் 19: வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள ஓட்டல்கள், மளிகை கடைகள் உள்பட பல்வேறு கடைகள் செயல்படுகின்றன. இந்த கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா  என பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 இந்நிலையில், வாலாஜாபாத் பஸ் நிலையம், காஞ்சிபுரம் சாலை, ரவுண்டானா ஆகிய பகுதியில் உள்ள பல்வேறு கடைகளில் பேரூராட்சி ஊழியர்கள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட 18  கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். மேலும், கடைக்காரர்கராதம் விதித்தனர்.

Tags : Walajabad Panchayat ,
× RELATED தேனி கடைகளில் 200 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல்