திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் வரிகளை உடனடியாக செலுத்த வேண்டும்

திருக்கழுக்குன்றம், ஜூன் 19:  திருக்கழுக்குன்றம் பேரூராட்சி செயல் அலுவலர் லதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் சுமார் 7,500 குடும்பங்கள் வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை செலுத்தி வருகின்றன. திருமண மண்டபங்கள், கடைகள், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள்  என சுமார் 1,200 பேர் தொழில் வரி செலுத்துகின்றனர். அதேபோல் 3,600 பேர் குடிநீர் வரி செலுத்தி வருகின்றனர். இவர்களில், பெரும்பாலானோர் இதுவரையில் வரிகளை செலுத்தாமல் உள்ளனர். எனவே, உடனடியாக இந்த வரிகளை  பேரூராட்சிக்கு செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


Tags :
× RELATED வரும் 31ம் தேதிக்குள் தொழிலாளர் நல நிதி செலுத்துவது கட்டாயம்