×

வேடந்தாங்கல் ஊராட்சி விநாயகநல்லூரில் பைப்லைன் மூலம் குடிநீர் வினியோகம்

மதுராந்தகம், ஜூன் 19: தினகரன் செய்தி எதிரொலியாக, விநாயகநல்லூரில் பைப்லைன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் வேடந்தாங்கல் ஊராட்சியில், புகழ் பெற்ற பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் வேடந்தாங்கல், சித்திரக்கூடம், வளையபுத்தூர், சித்தாத்தூர், துறையூர், விநாயக நல்லூர், திருவள்ளுவர் நகர்  ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. இங்கு, 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.கடந்த 2 நாட்களுக்கு முன் விநாயக நல்லூர் கிராமத்துக்கு முறையாக குடிநீர் வழங்காத, ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, வேடந்தாங்கல் - செங்கல்பட்டு  நெடுஞ்சாலையில், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த, செய்தி தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது.இதை தொடர்ந்து, அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் சார்லஸ் சசிகுமார் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர், அங்கிருந்த கிணற்றில் இருந்து விநாயக நல்லூர் பகுதிக்கு  பைப்லைன் அமைத்து, குடிநீர் வினியோகம் செய்தனர். இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.இதுகுறித்து அந்த ஊராட்சி செயலாளர் சாமிநாதன் கூறுகையில், இந்த ஊராட்சியில் தண்ணீர் பற்றாக்குறையை நிரந்தரமாக சீர்செய்ய வட்டார வளர்ச்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார்.

Tags : Panchayat ,Vedanthangal ,
× RELATED வாக்களிக்க பணம் தர இருப்பதாக புகார் ஊராட்சி மன்ற தலைவி வீட்டில் ரெய்டு