×

கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

செய்யூர், ஜூன் 19: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கூவத்தூரில் நேற்று முன்தினம் நடந்தது.இலத்தூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர், ஆர்.டி.அரசு எம்எல்ஏ ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். தலைமை கழக பேச்சாளர் ஈரோடு இறைவன்  சிறப்புரையாற்றினார்.

விழாவில், மாவட்ட துணை செயலாளர் தசரதன், முன்னாள் எம்எல்ஏ வெங்கடேசன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் மோகன்தாஸ், ஒன்றிய அணி அமைப்பாளர்கள் சுரேஷ்குமார், அருள்மொழி வர்மன், செய்யூர் ஊராட்சி செயலாளர்  தணிகாசலம், நிர்வாகிகள் குப்புசாமி, வேலு, ஏமநாதன், ராமமூர்த்தி, பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். கூவத்தூர் ஊராட்சி செயலர் குமார் நன்றி கூறினார்.

Tags : Karunanidhi Birthday Celebration ,
× RELATED பூந்தமல்லியில் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்