×

மயிலாப்பூரில் துணிகரம் அடுத்தடுத்த 5 கடைகளில் 4.5 லட்சம் கொள்ளை: ஆசாமிகளுக்கு வலை

சென்னை: மயிலாப்பூரை சேர்ந்த டாக்டர் தியாகராஜன், மயிலாப்பூர் மாதா சர்ச் சாலையில் கிளினிக் நடத்தி வருகிறார். நேற்று காலை 7 மணிக்கு கிளினிக் அருகே பேன்சி ஸ்டோர் நடத்தும் ஜேம்ஸ் என்பவர் தனது கடையை திறக்க  வந்தபோது அருகில் இருந்த கிளினிக் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. உடனே இதுகுறித்து டாக்டர் தியாகராஜனிடம் தெரிவித்தார்.அங்கு வந்த தியாகராஜன் கிளினிக்குள் சென்று பார்த்தபோது, உள்ளே வைத்திருந்த ₹3 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. அதேபோல் அருகில் உள்ள மெடிக்கல் பூட்டை உடைத்து ₹25 ஆயிரம் கொள்ளை  போயிருந்தது. மேலும், ஹாட் பிரட் கடையின் பூட்டை உடைக்க முயன்றுள்ளனர். ஆனால் பூட்டை உடைக்க முடியாததால் அருகில் இருந்த அகஸ்டியன் என்பவருக்கு சொந்தமான காய்கறி கடை என அடுத்தடுத்து 5 கடைகளின் பூட்டை  உடைத்து மொத்தம் ₹4.5 லட்சம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து டாக்டர் தியாகராஜன் கொடுத்த தகவலின்படி, மயிலாப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிளினிக், மெடிக்கல் ஷாப்  உட்பட 5 கடைகளில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு ெசய்தனர். கிளினிக் மற்றும் மெடிக்கல் ஷாப்  மற்றும் ஹாட் பிரட் கடை மயிலாப்பூர் காவல் எல்லையிலும், மீதமுள்ள 2 கடைகள் பட்டினப்பாக்கம் காவல் எல்லையில் உள்ளதால் சம்பவம் குறித்து மயிலாப்பூர் மற்றும் பட்டினப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி  கேமரா பதிவுகளை ெபற்று மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.எப்போதும் பரபரப்பாக காணப்படும் மாதா சர்ச் சாலையில் அடுத்தடுத்து 5 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மயிலாப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மற்றொரு சம்பவம்:  அண்ணாநகரை சேர்ந்தவர் பினு (38). ஐடி  நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் பணி முடிந்து  ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு இரவு விருந்துக்கு  வந்ததாக  கூறப்படுகிறது. அங்கு தனது காரை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு  நண்பருடன் சாப்பிட்டு பிறகு, வீட்டிற்கு புறப்பட பினு தனது காரை எடுக்க  வந்தார். அப்போது காரின் பின் பக்க கதவின் கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த  லேப்டாப், கிரடிட் மற்றும் ஏடிஎம் கார்டுகள், ₹5 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தது தெரிந்தது.

பம்மல் பசும்பொன் நகரை சேர்ந்தவர் கிரேசி ஷீபா எலிசபெத் (45). இவரது மகள் தபிதா ஜெபராணிக்கு நேற்று முனதினம் மாலை புரசைவாக்கம் வடமலை தெருவில் உள்ள தேவாலயத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது  பையில் வைத்திருந்த மணமகளின் 3 சவரன் செயின், ஒரு சவரன் கம்மல், ஒரு ஜோடி கொலுசு மாயமானது. போலீசார் விசாரணையில், ஓட்டேரி செட்டில்மென்ட் நகரை சேர்ந்த விமல் (39) என்பவர், திருமண நிகழ்ச்சியில் உறவினர் போல்  நடித்து, நகையை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.

Tags : stores ,Mylapore ,robberies ,
× RELATED சென்னை மயிலாப்பூரில் இருசக்கர...