×

தென்காசி நகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சீருடைகள்

தென்காசி, ஜூன் 19: தென்காசி நகராட்சி 13வது வார்டு நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கும் விழா நடந்தது. செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ தலைமை வகித்து இலவச சீருடைகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் சீனிவாசன், வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் முத்துக்கிருஷ்ணன், அதிமுக நகர செயலாளர் சுடலை முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை கற்பகவள்ளி வரவேற்றார். நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் வெள்ளப்பாண்டி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கசமுத்து, மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியன், எம்ஜிஆர் மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஜெ. பேரவை செயலாளர் முருகன்ராஜ், 0.874 நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் பட்டுப்பூச்சி பீர்முகம்மது, இளைஞர் பாசறை பூக்கடை சரவணன், நகர பொருளாளர் சாமி, வார்டு செயலாளர்கள் கட்டிகாதர், சுலைமான், திவான்ஒலி, மாரியப்பன், இந்திரன், சுந்தரம், அகமதுஷா, தமிழ்செல்வன், மாணிக்கம், சரவணன், காஜாமைதீன், மைதீன்பிச்சை,  முகம்மது அலி, கனகசபாபதி, மும்பை கணேசன், அருணாசலம், ரமேஷ் மற்றும் அனைத்து ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ -மாணவிகள், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : town ,municipality ,Tenkasi ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...