நெல்லை பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்

நெல்லை, ஜூன் 19: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார்பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ்பாபு விடுத்துள்ள செய்திக்குறிப்பு: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் ஏப்ரல் 2019 இளநிலை பாடப்பிரிவுகளுக்காக நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மதிப்பெண் மறுமதிப்பீடு செய்ய விரும்புபவர்கள் அதற்குரிய படிவங்களை www.msuniv.ac.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். முதலில் விடைத்தாள் நகலை பெற்றுக்கொண்ட பின்னர் விண்ணப்பிக்கமுடியும். இதற்கு உரிய கட்டணத்துடன் படிவம் A  ஜூன் 21 முதல் 26க்குள் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதன் விபரம் அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அதன் பின்னர் மாணவர்கள் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் உரிய கட்டணத்துடன் பி 5.7.2019 முதல் விண்ணப்பிக்கலாம், கடைசிநாள் 10.7.19 ஆகும் என தெரிவித்துள்ளார்.

Tags : Nellai University Examination ,
× RELATED ராதாபுரம் சட்டமன்ற தொகுதி மறுவாக்கு...