×

மினிபேருந்து மோதி வாலிபர் படுகாயம்

அம்பை, ஜூன் 19: அம்பை அருகே மினிபேருந்து மோதி வாலிபர் படுகாய மடைந்தார்.   அம்பை அருகே கவுதமபுரியை சேர்ந்தவர் மாடசாமி மகன் பாரதி (24) எலக்ட்ரீஷியனான இவர், நேற்று மாலை அம்பை பஸ் நிலையத்தில் இருந்து பைக்கில் வெளியே வந்தார். அப்போது வேகமாக வந்த மினிபேருந்து பைக் மீது மோதியது.  இதில் தூக்கி வீசப்பட்ட அவர், தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அம்பை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.     விபத்து அம்பை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : teenager ,
× RELATED ஐதராபாத் வாலிபர் ரஷ்யாவில் மரணம்