×

தூத்துக்குடியில் 2வது நாளாக நாட்டுப்படகு மீனவர்கள் ஸ்டிரைக்

தூத்துக்குடி, ஜூன் 19:  தூத்துக்குடியில் 2வது நாளாக விசைப்படகு மீனவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.  தூத்துக்குடி  மீன்பிடி துறைமுகத்தில் மட்டும் 245 விசைப்படகுகள் உள்ளன. இவற்றில் சுமார்  150க்கும் குறைவான படகுகளே மீன்வளத்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே கடந்த 4 நாட்களாக விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்று வருகின்றன. இவற்றில் மீன்வளத்துறையில் பதிவு செய்யப்படாத விசைப்படகுகளும் அடங்கும். இவ்வாறு பதிவுசெய்யப்படாத விசைப்படகுகளும் கடலில் சென்று மீன்பிடிக்க நாட்டுப்படகு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவ்வாறு   மீன்வளத்துறையில்  பதிவு செய்யப்படாத விசைப்படகுகளை கடலில் மீன்பிடிக்க அனுமதிக்கக்  கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடியில் நேற்று முன் தினம் முதல் நாட்டுப்படகு மீனவர்கள்  ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஒருங்கிணைந்த நாட்டுப்படகு மீனவர்கள்  சங்கங்கள் மூலம் மறு அறிவிப்பு வரும் வரை இந்த ஸ்டிரைக் தொடரும் என்று  நாட்டுப்படகு மீனவர்கள் அறிவித்தனர். இதன் காரணமாக தூத்துக்குடி  திரேஸ்புரம், இனிகோநகர், புன்னைக்காயல், ஆலந்தலை, அமலிநகர் உள்ளிட்ட  பகுதிகளில் சுமார் 1200க்கும் மேற்பட்ட  நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க  செல்லாமல் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளன.   நேற்று முன் தினம்  இதே கோரிக்கையை வலியுறுத்தி நாட்டுப்படகு, பைபர், கட்டுமர மீனவர்கள்  சங்கத்தினர் கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து மனு அளித்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடியில் நேற்று 2வது நாளாக நாட்டுப்படகு மீனவர்கள்  இதே கோரிக்கையை வலியுறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

Tags : fishermen ,Tuticorin ,
× RELATED இலங்கை சிறையிலிருந்து...