கனிமொழி எம்பி முன்னிலையில் அதிமுகவினர் திமுகவில் ஐக்கியம்

தூத்துக்குடி, ஜூன் 19: தூத்துக்குடி மாவட்ட அதிமுக மீனவர் அணி நிர்வாகி அகஸ்டின் உள்ளிட்ட 50 பேர், கனிமொழி எம்.பி. முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். தூத்துக்குடி  மாவட்ட அதிமுக மீனவர் அணி முன்னாள் செயலாளரும், முன்னாள் கவுன்சிலரும்,  தமிழ்நாடு மீனவர் கூட்டுறவு இணைய முன்னாள் இயக்குநருமான அகஸ்டின் உள்ளிட்ட அதிமுகவினர் 50 பேர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி., முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அப்போது வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன்  எம்எல்ஏ, பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர்  ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர துணைச் செயலாளர்  கீதாமுருகேசன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஜான் அலெக்ஸாண்டர், மாவட்டப்  பிரதிநிதி கதிரேசன், மாநகர நிர்வாகிகள் நிர்மல்ராஜ், ரவிசந்திரன்,  முருகேசன், நவநீதகண்ணன், மார்ஷல், வினோத், ஆறுமுகம் உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.

Tags : DMK ,AIADMK ,
× RELATED விமான நிலையத்தில் கனிமொழி எம்பிக்கு உற்சாக வரவேற்பு