கோவில்பட்டி தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு

கோவில்பட்டி, ஜூன் 19: கோவில்பட்டி தாலுகா நடந்துவந்த ஜமாபந்தி நிறைவு பெற்றது.
   கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி துவங்கிய ஜமாபந்தி தொடர்ந்து 4 நாட்கள் நடந்து வந்தது.  ஜமாபந்தியின் நிறைவு நாளான நேற்று (19ம் தேதி) கோவில்பட்டி பிர்க்காவிற்கு உட்பட்ட பூசாரிபட்டி, லிங்கம்பட்டி, திட்டங்குளம்,    பாண்டவர்மங்கலம், கிளவிபட்டி, கொடுக்காம்பாறை, சிவந்திபட்டி, துறையூர் ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தியை கோவில்பட்டி ஆர்.டி.ஓ. விஜயா நடத்தினார். 5 நாட்கள் நடந்த ஜமாபந்தியில் பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனை பட்டா, நிலப்பட்டா,    முதியோர் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 858 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 115 மனுக்கள் ஏற்கப்பட்டன. 124 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. உரிய ஆணவங்கள் இல்லாததால் 619 மனுக்கள் நிலுவையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.     தாசில்தார் பரமசிவன், ஆர்.டி.ஓ.நேர்முக உதவியாளர் சூரியகலா, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் மல்லிகா, தலைமையிடத்து துணை தாசில்தார் ராமகிருஷ்ணன், மண்டல துணை தாசில்தார் சுரேஷ், ஆர்ஐ மோகன் மற்றும் விஏஓக்கள் பங்கேற்றனர்.

Tags : Jamapanti ,Kovilpatti Taluka ,
× RELATED பூந்தமல்லி ஜமாபந்தி நிறைவு 207 பேருக்கு நலத்திட்ட உதவிகள்