×

தூத்துக்குடி மாவட்டத்தில் 14 பிடிஓக்கள் பணியிட மாற்றம்

தூத்துக்குடி, ஜூன் 19: தூத்துக்குடி மாவட்டத்தில் 14 பிடிஓக்களை பணியிட மாற்றறம் செய்து கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பிடிஓ நிலையில் பணி தகுதியின் அடிப்படையில் நிர்வாக நலன் கருதி பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, விளாத்திகுளம் பிடிஓ (வ.ஊ) ஹெலன் பொன்மணி, தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலராக (கி.ஊ) நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி பிடிஓ (கி.ஊ) கருப்பசாமி, ஆழ்வார் திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலராக (வ.ஊ) நியமிக்கப்பட்டுள்ளார். ஆழ்வார் திருநகரி பிடிஓ (வ.ஊ) தங்கவேல், விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலராக (வ.ஊ) இடமாற்றறம் செய்யப்பட்டுள்ளார். ஆழ்வார் திருநகரி பிடிஓ (கி.ஊ) பால ஹரிஹர மோகன் விளாத்திகுளத்துக்கு (கி.ஊ) மாற்றறப்பட்டுள்ளார்.
 விளாத்திகுளம் பிடிஓ அரவிந்தன் (கி.ஊ) ஆழ்வார் திருநகரிக்கும், கருங்குளம் பிடிஓ (வ.ஊ) வெங்கடாச்சலம், ஓட்டப்பிடாரத்திற்கும் மாற்றறப்பட்டுள்ளனர்.

ஓட்டப்பிடாரம் பிடிஓ (வ.ஊ) அலுவலர் சுடலை, சாத்தான்குளம் பிடிஓ (வ.ஊ) ஆகவும், சாத்தான்குளம் பிடிஓ (வ.ஊ) செல்வி சாத்தான்குளம் பிடிஓ (கி.ஊ) ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.சாத்தான்குளம் பிடிஓ (கி.ஊ) சிவபாலன், புதூர் பிடிஓ (கி.ஊ) ஆகவும்,புதூர் பிடிஓ (கி.ஊ) முத்துக்குமார், கயத்தாறு பிடிஓ (வ.ஊ) ஆகவும், கயத்தாறு பிடிஓ (வ.ஊ) சுப்புலட்சுமி கருங்குளம் பிடிஓ  (வ.ஊ) ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி கலெக்டர்  அலுவலக (வட்டார வளர்ச்சி பிரிவு) மேலாளர் மாணிக்கவாசகம், கோவில்பட்டி பிடிஓ (கி.ஊ) ஆகவும், கோவில்பட்டி பிடிஓ (கி.ஊ) முருகானந்தம் தூத்துக்குடி கலெக்டர்  அலுவலக (வட்டார வளர்ச்சி பிரிவு) மேலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு  கலெக்டர் அந்த செய்திக்குறிப்பில்தெரிவித்துள்ளார்.

Tags : PDOs ,Tuticorin district ,
× RELATED தமிழகத்தில் 5 கூடுதல் எஸ்.பி.க்களை...