எட்டயபுரத்தில் வெளிமாநில மதுபானம் விற்ற வாலிபர் கைது

எட்டயபுரம், ஜூன் 19: எட்டயபுரத்தில் வெளிமாநில மதுபானம் விற்ற வாலிபரை  போலீசார் கைது செய்தனர்.எட்டயபுரம் தெப்பக்குள தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜா (37). நடுவிற்பட்டியில் நடத்திவரும் பெட்டி கடையில் புதுச்சேரி மதுபானம் விற்பனை செய்துவந்தார். தகவலின்பேரில் ரோந்து வந்த கோவில்பட்டி மதுபான பிரிவு போலீசார், அவரை கைது செய்து அவரிடம் இருந்த 1 லிட்டர் அளவுள்ள 10பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: