×

வேலூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் விதிமீறிய வாகன ஓட்டிகள் 5,610 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிக ரத்து: எஸ்பி உத்தரவின்பேரில் நடவடிக்கை

வேலூர், ஜூன் 19: வேலூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் விதிமீறிய வாகன ஓட்டிகள் 5,610 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாவட்டந்தோறும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல் வேலூர் மாவட்டத்திலும் தேசிய நெடுஞ்சாலைகளில் இரும்பு தடுப்புகள், ஒளிரும் மின்விளக்குகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சாலை பாதுகாப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.இருப்பினும் சாலை விபத்துக்கள் தொடர்ந்து வருகிறது. எனவே சாலை விதிகளை பின்பற்றாது விதிமீறும் வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் கடந்த 6 மாதங்களாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் அதிவேகமாக சென்ற 535 வாகனங்கள், சிக்னலில் நிற்காமல் சென்ற 2,648 பேர், செல்போன் பயன்படுத்தி வாகனம் ஓட்டிய 19,939 பேர், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 3,825 பேர், அதிக பாரம் ஏற்றிய 3,608 பேர் உட்பட மொத்தம் 42,751 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.அதேபோல் தலைக்கவசம் அணியாத 64,222 பேர், சீட் பெல்ட் அணியாத 17,412 பேர் என்று 10,170 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய எஸ்பி பரிந்துரை செய்தார். இதில் முதல்கட்டமாக 5,160 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 4,560 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : motorists ,Vellore district ,
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...