போக்குவரத்து சிக்னல் திறப்பு

ஈரோடு, ஜூன் 19: ஈரோட்டில் கோகுல் ஆட்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.12 லட்சம் செலவில் 7 சிக்னல் மற்றும் கேமரா பப்ளிக் அட்ரஸ் சிஸ்டம் அமைக்கப்பட்டது.ஈரோடு மாநகரின் முக்கிய பகுதியான அரசு மருத்துவமனை ரவுண்டானா சந்திப்பில் ஈவிஎன் ரோடு, பிரப் ரோடு, பெருந்துறை ரோடு, நசியனூர் ரோடு, ேமட்டூர் ரோடு ஆகிய 5 ரோடு சந்திக்கின்றன.இந்த வழியாக, கோவை, கரூர், பழனி, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் அதிகளவில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதைத்தடுக்க எஸ்பி சக்திகணேசன் அறிவுறுத்தலின்பேரில் கோகுல் ஆட்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.12 லட்சம் செலவில் 7 நிரந்தர போக்குவரத்து சிக்னல், கேமரா பப்ளிக் அட்ரஸ் சிஸ்டம் அமைக்கப்பட்டது. இதை எஸ்பி சக்திகணேசன் திறந்து வைத்தார்.கோகுல் ஆட்ஸ் நிறுவன உரிமையாளர் சீனிவாசன், டிஎஸ்பி எட்டியப்பன், இன்ஸ்பெக்டர் ரமணன், கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.Tags :
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனை