லாட்டரி, மது விற்ற 7 பேர் கைது

ஈரோடு, ஜூன் 19: ஈரோடு  மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை  நடத்தினர். அப்போது, சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட நம்பியூர்,  எ.செட்டிபாளையத்தை சேர்ந்த தம்பிதுரை (43), காசிபாளையம்  குருநாதன்வாய்க்கால்மேடு பகுதியை சேர்ந்த முருகன் (55), இருகலூர் பகுதியை  சேர்ந்த பொன்னுசாமி (62) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து  ஏராளமான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இதேபோல், லாட்டரி  விற்பனையில் ஈடுபட்ட புளியம்பட்டி நந்தவனம் தங்கசாலை வீதியை சேர்ந்த மணி  (65), காந்திநகர் கீழ் வீதியை சேர்ந்த நடராஜன் (70), பாண்டியன்கிணறு  பகுதியை சேர்ந்த ரமேஷ் (49), கோபி டி.ஜி.புதூர் காமராஜர் வீதியை சேர்ந்த  இசக்கிதுரை (40) உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags :
× RELATED லாட்டரி வாங்க மிரட்டல் விடுத்த 3 பேர் கைது