கோயிலுக்குள் புகுந்து யானை அட்டகாசம்

பந்தலூர்,  ஜூன் 19: பந்தலூர் அருகே அரசு தேயிலைத்தோட்டம் பாண்டியார் சரகம் 4பி  பகுதியில் உள்ள  மாரியம்மன் கோயிலுக்குள் புகுந்து காட்டுயானைகள் கோயில்  கதவு, குடிநீர்  தொட்டி மற்றும் உள்ளே இருந்த பாத்திரங்கள் ஆகியவற்றை  உடைத்து சேதம்  செய்தது. இந்த சம்பவம் குறித்து கோயில் கமிட்டியினர் தேவாலா  வனத்துறைக்கு  புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு  சென்ற வனத்துறையினர்  சேதம் குறித்து ஆய்வு செய்து, விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Tags :
× RELATED தந்தத்துக்காக யானைகளை வேட்டையாடியவர் கைது