×

வேலிவியூ பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

ஊட்டி, ஜூன் 19:      ஊட்டி அருகேயுள்ள வேலிவியூ பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 20க்கும் மேற்பட்ட ஆடுகள் சிறுத்தை தாக்கி இறந்துள்ளதாக கூறப்படுகிறது. சிறுத்தை ஊருக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்த நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இப்பகுதியில் வசித்து வரும் அஷ்ரப் என்பவர் வளர்த்து வந்த ஆடுகள் குடியிருப்பை ஒட்டி மேய்ந்து கொண்டிருந்தன. நேற்று மாலை தேயிலை தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு ஆட்டை சிறுத்தை தாக்கியுள்ளது. ஆட்டின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சத்தம் எழுப்பியுள்ளனர். இதனால் கடித்த ஆட்டை போட்டு விட்டு சிறுத்தை வனத்திற்குள் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த ஆடு உயிருக்கு போராடியது.

 இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: வேலிவியூ பகுதியில் கடந்த சில மாதங்களாகவே சிறுத்தை நடமாட்டம் உள்ளது. மேய்ச்சலில் ஈடுபடும் ஆடுகளை வேட்டையாடி சென்று விடுகிறது. பகல் நேரங்களிலேயே குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை உலா வருவதால் பெண்கள், குழந்தைகள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Tags : area ,Valviya ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...