தேவர்மலையில் இன்று மனுநீதிநாள் முகாம்

ஈரோடு, ஜூன் 19: பர்கூர் தேவர்மலையில் மனுநீதி நாள் முகாம் இன்று நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சியில் மாதந்தோறும் மனுநீதி நாள் முகாம் நடந்து வருகிறது. அதன்படி, ஜூன் மாதத்திற்கான மனுநீதிநாள் முகாம் அந்தியூர் தாலுகா பர்கூர் உள்வட்டத்திற்குட்பட்ட தேவர்மலை சமுதாய கூட கட்டிடத்தில் இன்று காலை 11 மணிக்கு நடக்கிறது. முகாமில் அனைத்து துறை அலுவலர்களும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர். இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன் பெற மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : camp ,Mannuth Day ,
× RELATED இலவச பொது மருத்துவ முகாம்